ஓடிடியில் ரிலீசாகும் ஆர்யாவின் அடுத்த படம்!!
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இருப்பினும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் வராத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திரை அரங்குகள் திறந்த பிறகும் ஓடிடியில் ரிலீஸ் செய்வதை பல தயாரிப்பாளர்கள் பாதுகாப்புடன் கருதுவதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’, சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ உள்பட பெரிய நடிகர்களின் படங்களும் ஓடிடியில் ரிலீசாகி வரும் நிலையில் தற்போது ஆர்யா நடித்த ’டெடி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் என்ற அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
டிஸ்ட்னி ஹாட்ஸ்டாரில் ‘டெடி’ திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் இந்த படம் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆர்யா சாயிஷா, சாக்சி அகர்வால், சதீஷ், கருணாகரன், மகிழ்திருமேனி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை