பிரபல குணசித்திர நடிகர் காலமானார்!!
பழம்பெரும் குணசித்திர நடிகரும் வசனகர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் இன்று காலமானார் அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சரத்குமார் நடித்த ’நாட்டாமை’ படம் உள்பட பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் ஈரோடு சௌந்தர். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு சரத்குமார் குஷ்பு நடித்த சிம்மராசி என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
மேலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’சேரன் பாண்டியன்’ ’நாட்டாமை’ உள்பட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஈரோடு செளந்தர் எழுதிய கதையான ’நாட்டாமை’ படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் ரீமேக் ஆனது என்பதும் இதில் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்பில் தமிழில் விஜயகுமார் நடித்த கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரோடு சௌந்தர் இன்று காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு சௌந்தர் மறைவை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை