முன்னேஸ்வரத்தில் பஞ்சலோக சிலை கொள்ளை!

 


சிலாபம் – முன்னேஸ்வரத்தில் அமைந்துள்ள மயான காளியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஞ்சலோக சிலை கொள்ளையிடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 29ஆம் திகதி அதிகாலை 1.30 அளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக ஆலயத்தின் பொறுப்பாளர்கள் பொலிஸில்முறைப்பாடு செய்துள்ளனர்.


இதேவேளை ஆலயத்தின் உரிமை சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கு இடையில் இருந்து வரும் தகராறு காரணமாக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.


இந்நிலையில் ஒரு தரப்பினர் ஆலயத்திற்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


கொள்ளையிடப்பட்ட சிலை ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தாகவும்


இதற்கு முன்னரும் குறித்த தெய்வ சிலை திருப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.