PHI பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, பயிற்சி பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடமையில் ஈடுபட்டிருந்த அவர்களில் ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களில் 21 பேர், நய்வல வெயாங்கொடை பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் , 28 பேர் தமது பயிற்சி நிலையங்களிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.