தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா படம் புகழ் நெல்சன் திலீப் குமார் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 10ம் தேதி வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


விஜய்யின் புதுப்பட அறிவிப்பு வெளியாகும்போது எல்லாம் அதில் தான் ஹீரோயினாக இருக்க மாட்டோமா என்று ரஷ்மிகா மந்தனா எதிர்பார்ப்பது வழக்கமாகிவிட்டது. விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறி வருவதால் தளபதி 65 படத்தில் ஒரு வேளை ரஷ்மிகா தான் ஹீரோயினாக இருக்குமோ என்றெல்லாம் பேச்சு கிளம்பியது.


இந்நிலையில் ரஷ்மிகா இல்லை மாறாக டோலிவுட், பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்.


பூஜா தற்போது பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து சர்கஸ் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவாவின் முகமூடி படம் மூலம் தான் பூஜா நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு அவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.


பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஆடிய புட்ட பொம்மா பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. தமிழகத்தை சேர்ந்தவர்களும் புட்ட பொம்மாவை கொண்டாடினார்கள்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.