ஜீடிவியில் அம்பிகா நடிக்கும் புதிய தொடர்!
ஜீ டிவியில் நேற்று முதல் ’திருமதி ஹிட்லர்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடர் ஆரம்பமாகியுள்ளது. மாலை 6,30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
திருமதி ஹிட்லர் என்ற தொடரில் ஹாசினி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தனாவும், ஏஜே என்ற கேரக்டரில் அபிநவ் ஜனார்த்தனமும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் அமித் பார்கவ், பேராசிரியர் ஞானசம்பந்தம், நடிகை அம்பிகா, சௌமியா, ஸ்ரீ சுப்புலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஆயுஷ்மான் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடரை எஸ். என்.ராஜ்குமார் இயக்குகிறார்
நம் வாழ்க்கையையும் நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தையும் ஒரு இலகுவான மனநிலையோடும், புதுமையாகவும் காணவேண்டும் என்பதே இந்த தொடரின் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் மக்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை