ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கவிப்பேரரசு!

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், ரஜினியின் பல படங்களுக்கு பாடல் எழுதியவருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது பாணியில் ரஜினிக்கு வாழ்த்துக்கவிதை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கலை உலகில்

என்

அணுக்கமான நண்பர்கள் சிலருள்

நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த்.


எழுபதைத் தொடுகிறார்.


எழுபது என்பது

முதுமையின் இளமை

அல்லது

இளமையின் பெருமை.


உடல் நலத்தோடும்

மன வளத்தோடும்

பல்லாண்டு வாழத்

தொலைபேசியில் வாழ்த்தினேன்.

மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.