மரணத்தில் சந்தேகம் - சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி!!
சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சித்ராவுக்கு ஹேமந்த் என்பவருடன் இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருப்பதாக முதலில் செய்தி வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள செய்தியின்படி இரண்டு மாதங்களுக்கு முன் ஹேமந்த், சித்ரா ஆகிய இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் சித்ரா தற்கொலை செய்தபோது ஹேமந்த் அதே அறையில் இருந்ததால் கணவர் என்ற முறையில் அவரிடம் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் இது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை