கொரோனா தடுப்பூசி பெற்ற இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!


ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஆஷா என்ற பணியாளர் கடந்த 19-ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது செவிலியர் ஒருவர் 16-ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில்,  அன்று முதல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.