பப்ஜி விளையாடிய இளைஞன் தவறி விழுந்து பலி!


 ஈரோடு மாவட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து பலியான சோக சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்பவர் உறவினர்களுடன் தங்கி எழுமாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இவர் மாலை வேலை முடிந்ததும் அவர் தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்பவருடன் செல்போனில் ப்ரீபையர் கேம் விளையாடி வந்த நிலையில் வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏறி ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்து சென்று உயரமான கட்டிடத்தில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தார்.

பிறகு இரவு 7 மணியளில் கீழே இறங்கும்போது தவறி விழுந்தால் ஆஸ்பெட்டாஸ் கூரை வலுவிழந்து உடைந்ததால் தலை, கை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதுள்ளது.

இதையடுத்து அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இது குறித்து அரச்சலூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.