இனவாதம் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது- பிரதமர்
கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்,
நான் மதகுகளை அமைக்க மாட்டேன், நான் மதகு அமைப்பவன் அல்ல. நாட்டை கட்டியெழுப்பவே நான் உள்ளேன். நாட்டை மதகுக்குள் கொண்டு செல்ல வேண்டுமானால் மதகு அமைப்பவர்களிடம் கையளியுங்கள். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் எங்களுடன் வருமாறு நான் அழைக்கிறேன்.
நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும். கூச்சலிட்டு, கோஷமிட்டு, இனவாதத்தில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாம் இந்த அரசை விட்டு தப்பிச் செல்லவில்லை. நாம் அனைவரும ஒன்றாக இருந்தோம். என்றார்.
கருத்துகள் இல்லை