3வயது குழந்தைக்கு கொரோனா!


 ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியதனை தொடர்ந்து வைத்தியசாலையின் 10வது அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அறையில் பணியாற்றிய ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான குழந்தை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பயணித்த சிறிய ரக வேன் ஒன்று பதுளை – கொழும்பு வீதியின் ஊவதென்ன பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேர்களில் இந்த குழந்தை மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கும் இரண்டாவது PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.