சாக்லேற் கனவுகள் 10 - கோபிகை!!

 


வீட்டிற்கு ஒரே பெண்ணாகப்

பிறந்துவிட்டவள் கனிகா.

அவளுடைய ஆசைகளே

அவள் வீட்டில் பிரதானம். 


தன்னை யாரும், எப்போதும் 

இரண்டாம் நிலையில் 

நிறுத்திப் பார்ப்பதை 

அவள் விரும்புவதே இல்லை.

அவளால் அதை  ஏற்கவும்

முடியாது. 


ஆதியோடு அனுதியைக் 

கண்டுவிட்டவள், 

அவர்கள் தன்னைக் 

காணும் முன்பே

அவசரமாய் அவ்விடம்

விட்டகன்றாள். 


அவளுடைய அந்த தவறுக்கு

காதலும் ஒரு வகையில்

காரணமாயிற்று.....

காதல் மணற்கடிகாரம் 

போன்றது தானே, 

பூரிப்பில் மனசு நிறையநிறைய 

மூளை வெறுமையாகிவிடுகிறது....


மனித வாழ்வென்பது

வீட்டிலிருந்துதானே 

ஆரம்பிக்கிறது.....

வீட்டில் அவளுக்கிருந்த இடம்

அவளை இவ்வாறு 

சிந்திக்கச் செய்தது. 


சுதந்திரம் என்பது

சிறகைக் கொடுக்கிறது 

என்றாலும்

நேசம் தானே 

மண்ணில் வேரூன்றச் 

செய்கிறது. 


அனுதி பிறந்தது முதல்,

தனக்கு விபரம் 

தெரிந்த நாள்முதல் 

ஆதியிடம் எதையுமே 

மறைத்து அறியாதவள்,

இந்த விசித்திர உணர்வையும்

சொல்லத்தான் துடித்தாள். 


ஆனால் புத்தி இடித்தது,

'ஒருவேளை அவளுக்காக 

ஆதித்யன், கனிகாவைப் 

பார்க்காமலே திரும்பிவிட்டால்?'


ஆதியின் சந்தோசங்கள்

அவளுக்கு முக்கியம்,

தன்னை பெரும்பாடுபட்டு

நிதானித்துக் கொண்டவள்,

இரண்டடி பின்னாலேயே 

நடந்து சென்றாள்..... 


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.