லிந்துலையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!


நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை சுகாதார பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி லிந்துலை ராணிவத்தை தோட்டம், மவுசாஎல்ல தோட்டம், நோனா தோட்டம், வோல்ட்றீம் தோட்டம், அக்கரப்பத்தனை தொன்பீல்ட் ஆகிய தோட்டங்களில் தலா ஒரு தொற்றாளர்கள் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய ஐந்து தொற்றாளர்களும் லிந்துலை தியனலகல தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் வட்டவளை ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொற்றாளர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.