இலங்கையின் டிக்டொக் ஜோடியை நடுவீதியில் தாக்கிய பெண்கள்!


 பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதால் எழுந்த சர்ச்சையையடுத்து, சிங்கள டிக்டொக் பிரபலமான ஜோடியொன்று தாக்கப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள பெரேரா அன்ட் சன்ஸ் துரித உணவகத்திற்கு வெளியே பதிவான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பெண்களால் இளைஞன் தாக்கப்படும் காட்சிகள் உள்ளன.

டிக்டொக் பிரபலங்களான நதீஷ்- ஷானு கமகே ஜோடி முகக்கவசம் அணியாமல் அந்த உணவகத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, அங்கிருந்த பணியாளர்கள், அந்த ஜோடியை முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். எனினும் ஜோடி அதற்கு இணங்கவில்லை.

வாடிக்கையாளரான பெண்ணொருவரும் முகக்கவசம் அணியுமாறு கூறியிருக்கிறார். அந்த பெண்ணுடன், அந்த ஜோடி அநாகரிகமான வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த ஜோடியை தனது கைபேசியில் அந்த பெண் வீடியோ எடுக்க முயல, அதை அந்த ஜோடி பறித்துள்ளது.

இதையடுத்து மோதல் வெடித்துள்ளது.

உணவகத்தின் வெளிப்பகுதியில் நடந்த மோதலின் இறுதிக்கட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் டிக்டொக் பிரபலம் நதீஷ் மீது பெண்ணொருவர் தாக்குதல் நடத்துவதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தலையிடுவதும் பதிவாகியது.

முகக்கவசம் அணியாத குற்ற்சாட்டில் அந்த ஜோடி கைதானார்களா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Blogger இயக்குவது.