வைத்தியசாலை செல்ல மறுக்கும் வாசுதேவ!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலைக்கு செல்ல மறுத்து வீட்லேயே தங்கியுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தொடர்ந்தும் தனது வீட்டிலேயே தங்கியிருப்பாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றாளர் ஒருவர் சிகிச்சை மையமொன்றிற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது கட்டாயம் என்பதால், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல சுகாதார வைத்திய அதிகாரிகள் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வாசுதேவவின் பிறந்ததினம் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றது. இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சு அலுவலகத்திலும் பிறந்ததின நிகழ்வு இடம்பெற்றது. அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை