வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா!
வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
எனினும் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக வவுனியா மில் வீதியில் உள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதன் மூலம் இன்றைய தொற்று எண்ணிக்கை 18 ஆகவும், கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 148 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை