முழு நாட்டையும் முடக்குமாறு கோரிக்கை!


 கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று வரையில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கிராமத்திற்கு கிராமம் அல்லது பிரதேசத்திற்கு பிரதேசம் தனிமைப்படுத்தவில்லை என்றால் நோயை கட்டுப்படுத்த முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 251 கொவிட் மரணங்களும் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.