ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை பறிப்பு!


 நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 6 மாதங்களில் இழக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சபையின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு அவர் தனது பதவியை இராஜினாமா செய்தால் அவரது ஆசனத்திற்கு வேட்பு மணுவில் அடுத்த இடத்தில் உள்ளவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அவர் தனது பிரஜா உரிமையையும் இழப்பார் என அவர் கூறியுள்ளார்.

அவர் விடுதலையாகிய நாள் முதல் 7 வருடங்கள் அவரது பிரஜா உரிமையும் இழக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 12ஆம் திகதியின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.