சுற்றுலா சென்ற பெண்கள் விபத்தாகி பரிதாப மரணம்!

 


சுற்றுலாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண்கள் பாரிய விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் கர்நாடகா மா நிலத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

கர்நாடகாவில் தார்வாட் நகர் அருகே சிறியரக பேருந்தும் டிப்பர் ரக பாரவூர்த்தியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்திலேயே குறித்த 10 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுற்றுலா பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு தாவனகிரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே பேருந்து ஒன்று கோவா நோக்கி சென்று கொண்டிருந்தது.

இடிகட்டி எனும் பகுதியில் ஒற்றை வழி சாலையில் சென்ற குறித்த பேருந்து, எதிபாராத விதமாக பாரவூர்த்திமீது மோதியது. இதில், பேருந்து தலைகீழாக கவிழ்ந்து முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் ஓட்டுநருடன் சேர்ந்து 11 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிப் பருவ பெண் தோழிகள் ஒன்றாக சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.