கழுகுகளின் பார்வையில் இருந்து!!


 காட்டுப் பூக்களின் வாசனை

எங்கோ துலாவியெடுத்த நினைவுகளாக
என்னை வசியம் செய்கிறது
மேகவானில் வலம் வரும்
பட்டுப் பூச்சியாய்
பரவசமாகப் பறக்கிறேன்
என் மனக்குழியில்
ஓராயிரம் வானம்பாடிகள்
இனிய கானமிசைக்கின்றது
ஆனாலும் இராக்கால பறவைகளின்
அலறல் சத்தமே
என் செவிப்பறைகளை கிளித்துப் போகிறது
முன்பொரு நாளில்
என் பெறுமதியான பொக்கிசங்களை மண்ணில் புதைத்தபோது ஏற்பட்ட
அதே படபடப்பு இன்று என்னை பற்றிக் கொள்கிறது
அன்றைய காட்சிகள் கறுப்பு வெள்ளை படமாக மனக்கண்ணில் ஓடுவதால்
பெரும் புயல்கடந்து சென்ற வள்ளம்போல்
செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன்
விதைக்கப்பட்ட அரூபமான ஆசைகளிற்கு ஆயுள் அதிகமே
கழுகுகளின் பார்வையில் இருந்து
என் கரங்கள் விடுபட வேண்டும்
துளியளவு தூக்கமாயினும்
ஆயாசமின்றி உறங்க வேண்டும்
மந்தகாச புன்னகை வீசி
சந்தன பேழைகளோடு
மண்மேனி தழுவி
முள்ளம் பன்றியின் முள்ளெடுத்து
எந்தன் ரகசியக் கனவை எழுதிடவும் ஆசை
இத்துப்போன சுள்ளி விறகாக
என்மன விளிம்பில் சிதைந்துபோன
ஞாபக கிளிசல்கள்
திராட்சையின் உலர் விதையைப்போல்
புதிதாக நிழற்படமாய் முகாமிடுகிறது...!
💕பிரபாஅன்பு💕

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.