மாப்பிளையை பிடிக்கவில்லையென எழுந்து சென்ற மணப்பெண்!


 தமிழ் சினிமா பாணியில் தாலி கட்டும் நேரத்தில், மாப்பிள்ளையில் விருப்பம் இல்லையென கூறி, மணப்பெண் எழுந்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று (21) முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

கேப்பாபிலவினை சேந்த யுவதிக்கும், முள்ளியவளை நாவல் காட்டினை சேர்ந்த இளைஞனுக்கும் பெற்றோர் நிச்சயித்த திருமணம் ஏற்பாடாகியது. நேற்று காலை வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலிகட்ட முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. பெண்வீட்டில் மதிய உணவு தயார்படுத்தப்பட்டிருந்தது.

வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் முகூர்த்த நேரத்தில் கோவிலில் தாலிகட்ட பூசகர்கள் முன்னிலையில் திருமண தம்பதிகள் கையில் தெற்பை போட்டு அமர்ந்தனர். ஜயர் தாலியினை எடுத்து மணமகனின் கையில் கொடுக்க முற்பட்ட போது திருமணத்தில் விருப்பம் இல்லை என மணப்பெண் அந்த இடத்தில் இருந்து எழுந்து வெளியேறியுள்ளார்.

மணப்பெண்ணினை சமரசப்படுத்த பெரியவர்கள் முயற்சித்தபோதும் மணப்பெண் இணங்கவில்லை. மணமகனில் தனக்கு விருப்பமில்லையென கூறினார்.

மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.