பாணந்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
பாணந்துறை- பள்ளேமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இருவர் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த குறித்த நபரை பள்ளேமுல்ல வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை