சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு அரசியல் விபச்சாரி!


 ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (25) நடாத்திய ஊடக சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஐ.நாவிற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும் சர்வஐன வாக்கெடுப்பை கஜேந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வெறு குற்றச்சாட்டுக்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார்.

இந் நிலையில் இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடாத்திய ஊடக சந்திப்பின் போது சுரேஸ்பிரேமச்சந்திரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அக் குற்றச்சாட்டக்களை கஜேந்திரகுமார் நிராகரித்தார். அது மட்டுமல்லாமல் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பல்வெறு குற்றச்சாட்டக்களையும் சுமத்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.