சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க உறவுகள் அழைப்பு!

 


இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊடக மன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், அன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து யாழ். முனியப்பர் ஆலயம் வரைக்கும் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பேரணியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.