டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதலா?


 டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் இஸ்ரேலிய தூதரகம் மீது குறி வைக்கப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.


டெல்லி அப்துல் கலாம் சாலையில் நேற்று மாலை 5.05 மணியளவில் இஸ்ரேல் தூதரகத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார். நான்கு கார்கள் சேதமடைந்துள்ளன.


இந்தப் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜய் சவுக் பகுதியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தாக்குதலுக்கு அமோனியம் நைட்ரேட் என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறுகையில், "குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இஸ்ரேல் தூதரகத்தின் மீது குறி வைக்கப்பட்ட தாக்குதலாக இருக்கலாம். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம். இந்த தாக்குதலின் சதி குறித்துக் கண்டறிய இந்தோ இஸ்ரேல் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


விசாரணை தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேல் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்தியா இஸ்ரேல் இடையேயான தூதரக உறவுகள் முழு நடைமுறைக்கு வந்ததற்கான 29வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்ட சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும். 2012 ஆம் ஆண்டு டெல்லியில் தூதரகத்திற்குச் சற்று தொலைவில் இஸ்ரேல் நாட்டுத் தூதர்கள் மீது தீவிரவாத தாக்குதல் ஒன்று நடந்தது. அதனுடன் இந்த தாக்குதலுக்குத் தொடர்பு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


- பிரியா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.