சுகாதார அமைச்சர் உடல் நலம் தேறி வருகிறார்!


 கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (ஐ.டி.எச்.) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போது அவரது உடல் நலத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்க தெரிவித்தார்.

கடந்த 23 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர் தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும், நேற்று அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் நிலை குறித்து வினவிய போதே , அவரது உடல் நலம் தேறிவருவதாகவும் பாரிய பாதிப்புக்கள இல்லை என்றும் சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் கூறினார்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கல் ஆரம்பமானநிலையில், வைத்தியசாலையிலிருந்து சுகாதார அமைச்சின் ஊடாக செயலாளர் ஊடாக அமைச்சர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதோடு , அவை முன்னிலையிலுள்ள சுகாதார அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போன போதிலும் இந்த செயற்திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.' என்று குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.