கணவனை ஆடைகளை கழற்றி வீசிய மனைவி!


 தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்று வந்த தம்பதியை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, ஆடை எல்லாம் கழற்றி தப்பிக்க முயன்ற மனைவியின் செயல் பொலிசாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். 42 வயதாகும் இவருக்கு உஷா(38) என்ற மனைவி உள்ளார்.

ரத்தினம் அந்த ஏரியாவில் ரவுடியாக வலம் வருகிறார். அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், இரவு நேரங்களில், ஓடைமாநகர் பகுதியில் டாஸ்மாக் சரக்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக, அதே சாஸ்திரி நகர் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போது, அங்கு உஷா மற்றும் ரத்தினம், இவர்களின் மகன் கார்த்திக் மற்றும் சிலர் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

அப்போது உஷா மட்டும் டம்ளர்களில் அங்கிருப்பவர்களுக்கு ஏதோ ஊற்றிக் கொடுத்து வந்துள்ளார். பொலிசார் வருவதைப் பார்த்தவுடன், உஷா உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.

இதனால் பொலிசார் மனைவி மற்றும் கணவர் இருவரையும் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது முதலில் ரத்தினத்தை பிடிப்பதற்காக வீட்டிற்கு பொலிசார் நுழைய முற்பட்ட போது, உஷா தன் ஆடைகளை எல்லாம் கழற்றி வீசியுள்ளார்.

எப்போது உஷா இப்படி தான் பொலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் கைது நடவடிக்கை என்றாலே உஷா வேகமாக ஆடைகளை கழட்டி வீச ஆரம்பித்துவிடுவார்.

இப்போதும் அப்படியே செய்ததால், பொலிசார் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளனர். இதற்கிடையில், உஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்குத்தானே உடம்பில் ஊற்றி கொண்டு, தீப்பெட்டியையும் கொளுத்தி கொண்டார்.

தற்கொலை செய்ய போவதாக மிரட்டவும், பொலிசார் பின்வாங்கினர். அப்போதுதான் உஷாவின் உடம்பில் தவறுதலாக தீப்பிடித்து கொண்டது.

இதனால் அதிர்ந்து போன பொலிசார் உடனடியாக உஷா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.. அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இப்போது உஷாவுக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், மேலும் 5 பிரிவுகளின் கீழ் உஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரத்தினம் தலைமறைவாகிவிட்டதால், பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.