மேலும் 346 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி!


 நாட்டில் மேலும் 346 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56422 ஆக அதிகாகித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 529 கொவிட் 19 நோயாளர்கள் சிக்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48000 ஐ கடந்துள்ளது.

இன்று மேலும் 633 பேர் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்ப நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48617 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.