50 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்!


அடுத்த மாத இறுதியில் இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.

50 வீதமானோருக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது 4 வகையான தடுப்பூசிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

53,750 பேருக்கு இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 7,660 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

COVID – 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,820 ஆக அதிகரித்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.