நேற்று 588 தொற்றாளர்கள்!


 நாட்டில் நேற்று 588 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை யை 49,537 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 576 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டனர்,

சிறைச்சாலைகளுக்குள் இருந்து எட்டு பேர் மற்றும் பாகிஸ்தான், கட்டார், மாலைதீவு மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,621 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 530 நபர்கள் குணமடைந்தனர்.

தற்போது, 64 வைத்தியசாலைகளில் 6,672 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 793 நபர்கள் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.