ட்ரெண்டிங்கில் நம்ம தல!

 


கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு, அஜித் குமார் நடித்திருக்கும் படம் ‘வலிமை’. இப்படத்தினை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார்.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து இயக்குநர் எச்.வினோத், அஜித் கூட்டணி 2ஆவது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளது. வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி, மற்றும் வில்லனாக கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் அதர்வா நடித்த ‘நூறு’ படத்தின் வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறார்.

மேலும், வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் நடித்து இருக்கிறார்கள். ‘தீரன்’ படத்தில் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத். மேலும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, நேர்கொண்ட பார்வை டெக்னீஷியன் டீமே இப்படத்திலும் பணியாற்றி உள்ளார்கள்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். முன்னர் வெளியாகிய தகவலின்படி ‘வலிமை படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்’ ஆகும் என்றும் பின்னர் ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் வரை வெளிவந்து கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது.

தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50ஆவது பிறந்தநாளான மே 1ஆம் திகதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில், அஜித் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனால், அஜித் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றார்கள். அஜித்தின் பிறந்தநாளிற்கு இன்னும் 100 நாட்களே உள்ளதாகவும், கவுண்டன் ஸ்டார்ட் என்றும், பதிவிட்டு, போஸ்டர்களை ஒட்டி, அதை ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் படத்திற்காக வெறித்தனமாக வெயிட் செய்து கொண்டு இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் #Thala50FestIn100D, என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. வருகிற ஏப்ரல் 14ஆம் திகதி, அதாவது தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வலிமை படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.