அமெரிக்க பாராளுமன்ற தாக்குதல் : தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை!


 நவம்பர் 2020-ல் நடந்து முடிந்த தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதில் அதிருப்தி அடைந்திருக்கும் சிலர், அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் அதீத எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி 6ம் திகதி அமெரிக்க பாராளுமன்றக் கட்டட தாக்குதலை நடத்திய சில டிரம்ப் ஆதரவாளர்களால், தீவிரமாக தங்கள் கருத்தை நம்பக் கூடியவர்கள் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் வெறுப்படைந்திருக்கும் சில தனி நபர்கள், மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என எச்சரித்திருக்கிறது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை.

ஆனால் எங்கு தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது, எப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது போன்ற தகவல்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.