மட்டக்களப்பு மாவட்ட காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று கடமைக்கு வருகைதந்த ஊழியர் ஒருவர் விபத்துக்குள்ளாகி களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு மேற்கொண்ட அன்டிஐன் பரிசோதணையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட காணிப் பதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்தோடு ஏதேனும் நோய் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் சுகாதாரதுறையினரை தொடர்பு கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.