தென்னாபிரிக்காவில் கொரோனாவால் 35ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்பு!


தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 35ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 35ஆயிரத்து 140பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில், இதுவரை 12இலட்சத்து 78ஆயிரத்து 303பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 18ஆயிரத்து 555பேர் பாதிக்கப்பட்டதோடு 806பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 12ஆயிரத்து 233பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பத்து இலட்சத்து 30ஆயிரத்து 930பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.