போரதீவுப்பற்றின் பல பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள்!
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், அதனை கட்டுப்படுத்தும் முகமாக தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர், சென்ற பகுதிகள் இனங்காணப்பட்டு, தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தம்பலவத்தை, சங்கபுரம், மண்டூர் ஆகிய பிரதேச சபை பொது நூலகம் ஆகியவற்றில் போரதீவுப்பற்று பிரதேச சபை ஊழியர்களினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18.01.2021 ம் திகதி மண்டூர் பிரதேசத்தில் 21 வயதுடைய இளைஞரொருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்றபோது முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிணை பேணிய 80 பேரும் 21 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மண்டூர் பிரதேசத்துக்குரிய பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும் மண்டூர் பிரதேசத்திலுள்ள பொது நூலகத்துக்கு சென்றவர்களும் இனங்காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் 18.01.2021ம் திகதி, மண்டூர் பொது நுலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
25.01.2021 ம் திகதி மண்டூர் பிரதேசத்துக்குரிய பொதுச்சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைவாக புதிய நூலக உதவியாளர்கள் மூலம் மீண்டும் திறந்து செயற்படுத்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி பிரதேசசபை செயலாளர் பா.சதீஸ்கரன் ஆகியோர்களின் வேண்டுதலுக்கு அமைவாக நேற்று, சங்கர்புரம், தம்பலவத்தை, மண்டூர் பொது நூலகம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச சபை ஊழியர்களினாள் கிருமித் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை