வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று!


வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது. அதனடிப்படையிலேயே வவுனியா மில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.