மோடி கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுடன் கலந்துரையாடல்!


வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி இன்று ( வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி  மூலம் உரையாடுகிறார்.

இந்நிலையில்  இது குறித்து பிரதமர் மோடி தனது  ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாரணாசியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயனாளிகள் மற்றும் தடுப்பூசி போட்டவர்களுடன் காணொலி காட்சி மூலம்  கலந்துரையாடவுள்ளேன்.

தடுப்பூசி திட்டத்தால் பயனடைந்தவர்களின் அனுபவத்தை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ள போகிறேன். இந்நிகழ்வை மக்கள் அனைவரும் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூ போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக  கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் நடவடிக்கையின்போது பிரதமர் நரேந்திர மோடி,  மாநில முதல்வர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசியை வழங்க அரசு தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.