அபாய வலயமாக மாறும் மற்றொரு மாவட்டம்!

 


நேற்று முன்தினம் நாட்டில் கொரோனா 19 தொற்றாளர்கள் 692 பேர் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் ஐவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள எனவும் ஏனைய 687 பேரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் எனவும் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்திலும் 119 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 112 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 233 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (14) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,435 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் மீன் சந்தை கொத்தணியில் (37,450) இருந்து மொத்தமாக 40,509 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் (14) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,231 ஆகும். அவர்களில் 43,266 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,718 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.