யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் இணையத்தில் வைரல்!


யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் குறித்த நாடகம் தயாரிக்கப்பட்டு, படப்பிப்புக்கள் அண்மையில் நிறைவடைந்தன.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த நாடகத்தினை சூம் தொழிநுட்பம் ஊடாக நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்புவதாக செயல்திறன் அரங்க இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும் செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில் த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.