கொத்து சப்பாத்தி - சமையல்!




தேவையான பொருட்கள்:


1. கடுகு – 1 தேக்கரண்டி

2. சீரகம் – 1/2 தேக்கரண்டி

3. சோம்பு – 1/2 தேக்கரண்டி

4. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்

5. தக்காளி – 1 எண்ணம்

6. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்

8. முட்டைக்கோஸ் - 1/2 கப் (துருவல்)

9. சப்பாத்தி – 4 எண்ணம்

10. மல்லித்தழை – சிறிது

11. குடை மிளகாய் – 1 எண்ணம்

12. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

13. எண்ணெய் – தேவையான அளவு

14. உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

2. சப்பாத்தியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

3. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், சோம்பு போட்டு அதனுடன் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

4. வெங்காயம் பொன்னிறமானதும் குடை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

5. பிறகு தக்காளி, முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.

6. இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

7. சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.