சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை!

 


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான் அன்வர் பட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் நேற்று(26) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னாள் தலைவர் நவீத் மற்றும் உயர்மட்ட துடுப்பாட்ட வீரர் ஷைமான் ஆகியோர் ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா இரண்டு குற்றங்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதையடுத்து இவவாறு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு டி-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் போட்டிகளை சரிசெய்ய முயன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.