இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக திருகோணமலையிலும் போராட்டம்!


இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இந்திய இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்திய விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அதானி எனும் குறித்த முதலீட்டாளர், தற்போது இலங்கையிலும் சில முதலீடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குறித்த நபருக்கு விற்க இந்த அரசு தீர்மானித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஒன்றுகூட்டுனர் அருன் ஹேமசந்திரா, “கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் தாம் சுற்றுச் சூழலுடன் பாரிய ஈடுபாடுள்ளவராக சித்தரித்துக் கொண்டார்.

ஆனால் கடந்த வருடத்தில் மாத்திரம் ஒரு நாளைக்கு சுமார் 10 ஏக்கர் காணியானது அளிக்கப்பட்டது என்பதை அவர்களது தரவுகளே கூறுகிறது.

யானைக்கு மனிதர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது, சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது, தேசிய சொத்துக்கள் விற்கப்படும் பிரச்சினையும் அதிகரித்து வருகின்றது, இவற்றினை அரசு உடன் நிறுத்தாவிட்டால் பாரிய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.