ஜா-எல பகுதி விபத்தில் மூன்று பேர் பலி!

 


ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விமானப்படை முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.


இன்று (31) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

ஜா-எல பகுதியில் இருந்து மினுவங்கொடை நோக்கி பயணித்த மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகிச் சென்று பாதுகாப்பு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமைந்த சாரதி மற்றும் மேலும் இருவர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 49, 47 மற்றும் 69 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.