கிளிநொச்சி மாவட்டத்திலும் படைப்புழுவின் தாக்கம்!

 


சோளப்பயிர்களுக்கு சவாலாக மாறி வருகின்ற படைப்புழுவின் தாக்கம் கிளிநொச்சி மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 18 ஏக்கர் சோளச் செய்கை படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக வடமாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – கனகாம்பிகைக்குளம், ஜெயபுரம், வன்னேரிகுளம் அக்கராயன் குளம் போன்ற பகுதிகளில் இவற்றின் தாக்கத்தை அவதானிக்க முடிவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் செய்கை செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் தற்போது 18 ஏக்கர் நிலப்பரப்பில் படைப்புழுவின் தாக்கத்தை உணரக்கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.