‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ என்ற செயற்றிட்டம் கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு!


‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ என்ற அடிப்படையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி- திருவையாறு கிராமத்தில், வடக்கு மாகான ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் பதிவு செய்யப்பட்ட வங்கிகள், ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து குறித்த கிராமத்தை பல்துறை சார் உற்பத்திகளை இனங்கண்டு, அவர்களின் பொருளாதாரத்தை மெருகூட்டி பசுமையான கிராமமாக மாற்றும் நோக்கிலமைந்த ‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ என்ற அடிப்படையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி, திருவையாறு கிராமத்தில் தேசிய சேமிப்பு வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மு.ப 10.00மணிக்கு, திருவையாறு பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் விவசாயத் துறையையும் மக்களின் ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நோக்கில், ஆளுநரின் தலைமையில் கடந்த 2020.11.20ம் திகதியன்று மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடக்கு மாகாணத்திலுள்ள வங்கிகளின் உயரதிகாரிகள், விவசாய அமைச்சு அதுசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ என்ற அடிப்படையில் தத்தெடுத்த அக்கிராமத்திலுள்ள வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு நிதியீட்டம் மற்றும் வசதிப்படுத்தல்களை செய்வதனூடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த சிந்தனையில் மேற்படி திட்டத்ததை செயற்படுத்தவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்  இச்செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் கடன்திட்டங்களை வழங்குவதிலிருந்து சற்று மாறுபட்டு சகல துறைகளையும் ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு மிகப்பொருத்தமானவற்றை இனங்கண்டு பயிற்சிகள் உட்பட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து தொடர்ச்சியாக கண்காணிப்பு மூலம் குறிப்பாக இளம் சமூகத்தை பொருளாதார அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றும் வகையில் குறித்த செயற்றிட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.