அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வேண்டி விளக்கேற்றி வைப்பு!


தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்கு- கிழக்கில் பல்வேறு போராட்டங்கள்  தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று (வியாழக்கிழமை) மாலை மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் தரவன் கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தோட்டவெளி, பறப்பான்கண்டல், இசங்கன்குளம் ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில்  நேற்று மாலை 6.15 மணியளவில் விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அரசியல் கைதிகளின் உறவுகள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.