25 திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய உறுப்பினர் நியமனம் குறித்து முடிவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பாக கட்சியின் செயற்குழு திங்கட்கிழமை கூடி உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு கொண்டாட்டத்தை நடத்தவும் செயற்குழு முடிவு செய்யும் என நளின் பண்டார கூறினார்.
இதேவேளை கட்சியின் புதிய அரசியலமைப்பிறகு இணங்க புதிய பதவிகளுக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து செயற்குழு முடிவு செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை