ஊவா மாகாண சபை வளாகத்தில் 2021ஆம் ஆண்டு புதுவருட ஆரம்ப நிகழ்வு
2021 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஊவா மாகாண சபை வளாகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
மேலும், ‘செயற்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மலரும் இப்புத்தாண்டில் மேலும் பல பாரிய வேலைத்திட்டங்கள் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி எமது செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். அர்ப்பணிப்பு, வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இதன்போது செயல்திறன் மிக்க அரச சேவைக்கான உறுதிமொழி வழங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதான செயலாளர் பி.டீ.விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட சக உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை