15 ஆண்டுகளுக்குப் பின்னர் பலத்தீனத்தில் தேர்தல் அறிவிப்பு!

 


பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்துள்ளார். அந்நாட்டில், நீண்டகால பிளவுகளுக்கு மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் பின்னர் மக்கள், தேர்தலைச் சந்திக்கவுள்ளனர்.

இஸ்ரேலின் ஆக்கிரப்பிலுள்ள மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுய இராச்சியத்தைக் கொண்ட பலஸ்தீனிய ஆணையகம், எதிர்வரும் மே 22ஆம் திகதி சட்டமன்றத் தேர்தலை நடத்தவுள்ளது.

அத்துடன், வரும் ஜூலை 31ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் என அப்பாஸின் அலுவலகம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006இல் பலஸ்தீனியர்கள் கடைசியாக நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்திருந்தனர். அதில், ஹமாஸ் இயக்கம் ஆச்சரியமான வெற்றியைப் பெற்ற நிலையில் அங்கு அரசியல் பிளவுகள் விரிவடைந்தன. இது, 2007ஆம் ஆண்டில் காசா பகுதியைக் கைப்பற்ற வழிவகுத்தது. எனினும், தேர்தல்களை நடத்துவதில் நீண்டகால தாமதம் ஏற்பட்டது.

இதேவேளை, ஹமாஸ் இயக்கம் அந்த இடத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிய 2007 முதல் காசா இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் உள்ளது.

இந்நிலையில், நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு ஜனநாயக தேர்தல் செயன்முறையைத் தொடங்குமாறு தேர்தல் குழு மற்றும் மாநிலத்தின் அனைத்து மாநில அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என ஆணையகம் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில். ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரை, காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளும் உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்றபோதும், ஆக்கிரமிப்பிலுள்ள கிழக்கு ஜெருசலேமில் தேர்தல் வாக்குப்பதிவை நடத்த அனுமதிப்பது குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

இதேவேளை, தேர்தல் அறிவிப்பை ஹமாஸ் இயக்கம் வரவேற்றுள்ளது. கடந்த மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து தடைகளையும் தீர்க்க தாங்கள் பணியாற்றியதாகவும் இதனால் இந்த நாளை அடைய முடியும்.”

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.